ஹரக் கட்டாவிற்கு தப்பிச்செல்ல உதவிய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்
குற்றப்புலனாய்வுத்துறையின் காவலில் இருந்து 'ஹரக் கட்டா' தப்பிக்கும் முயற்சிக்கு உதவியிருக்கலாம்
என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைக்கப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) ஒருவரை பொலிஸ் மா அதிபர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு தொடர்பான விவாதம்
குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை இரவு நேரத்தில் சென்று பார்வையிட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, 'ஹரக் கட்டா' வழக்கு தொடர்பான விடயங்களை பல சந்தர்ப்பங்களில் விவாதித்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், 'ஹரக் கட்டா' தொடர்பான வழக்கை தன்னிடம் ஒப்படைக்குமாறு, குற்றப்புலனாய்வு உயர் அதிகாரிகளிடம், குறித்த அதிகாரி கோரி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த காரணங்களால் அவர் குற்றப்புலனாய்வுத்துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
