மகிந்த ராஜபக்ச வீட்டு பொருட்களுடன் வீதியில் காத்திருந்த நிலை.! பின்னணியில் நடந்த இரகசிய பேச்சுவாரத்தை அம்பலம்
மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும், தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்த சொகுசு வீடான பீகொக் மென்சன் (Peacock Mansion) வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இறுதியில் அதை வழங்க முடியாத சூழ்நிலையில் வீட்டு பொருட்களுடன் தங்காலையில் இருந்து கொழும்புக்கு வந்த மகிந்த ராஜபக்ச வீதியில் நின்ற ஒரு கதையை வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்..
மைத்திரி லியனகேவிடம் என்ன கூறினார்
மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் ஒரு வீடு வழங்குவதாக அறிவித்திருந்தேன். அதை அறிந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்திருந்தார்.
நான் மைத்திரியின் வீட்டுக்கு சென்றபோது ராஜித சேனாரத்தினவும் இருந்தார். அந்த வீட்டை மகிந்தவுக்கு கொடுத்தால் சிறைச்செல்ல நேரிடலாம் என்றனர்.
நான் கேட்டேன், " நான் ஏன் சிறைக்குச் செல்ல வேண்டும்? அக்காலத்தில் எதற்கெடுத்தாலும் சிறையில் அடைத்து அரசியல் பகையை தீர்த்துக்கொண்ட ஒரு கலாசாரம் இருந்தது.
"உங்களுக்கு நாங்கள் ஒரு ஆளுநர் பதவி தருகிறோம்" என்று சொன்னார்கள். வீட்டை கொடுக்க வேண்டாம் என்று கூறினர். நான் யோசித்தேன், சிறைக்குச் செல்வதை விட ஆளுநராவது நல்லது தானே என்று.
ஆனாலும் நான் சொன்னேன், " தூதுவர் பதவி வேண்டாம்" என்று. இல்லை, ஆளுநர் பதவியை தருகிறோம், நாளைக்கே வீட்டின் கதவை மூடுங்கள் என்று எனக்கு சொன்னார்கள்.

ஆனால் மகிந்த வீட்டுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் என்னை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரின் மனைவியும் பல அழைப்பு எடுத்திருந்தனர்.
ஆனால் என்னால் அழைப்பை எடுக்க முடியாமல் இருந்தேன். கடைசியில் வேறு வழியின்றி நான் சொன்னேன், "சர், இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. என்னை மன்னிக்க வேண்டும்" என்று.
அதற்கு மகிந்த ராஜபக்ச என்னிடம் சொன்னார், "நீங்கள் பயப்பட வேண்டாம். பயமில்லாமல் இதை திறந்துவிடுங்கள், நான் இப்போது எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்" என்றார். ஒன்றும் செய்ய வழியில்லாம் வீட்டை கொடுத்தேன். அதன்பின் சுமார் நான்கு மாதங்கள் சென்றன ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்கைத் துரிதப்படுத்தும் அநுர தரப்பு! விபரங்களை வெளியிட்டு வரும் நாமல்
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு! நாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகிரங்க உண்மை
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8