வீழ்ச்சியடையும் அபாயத்தில் ஆசியப் பங்குச் சந்தையின் குறியீடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
பங்குச்சந்தையில் வீழ்ச்சி
குறிப்பாக ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையின் குறியீடுகள் சரிவை சந்தித்துள்ளன.

ஹொங்கொங் பங்குச்சந்தை நிறுவனங்கள் ஆரம்பத்தில் 2 வீதத்திற்கும் அதிக சரிவை எதிர்நோக்கிய போதிலும், பின்னர் ஓரளவு மேம்பட்டதாக வர்த்தக தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனேடிய மற்றும் மெக்சிக்கன் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளையும், சீன பொருட்களுக்கு 10 சத வீத வரியையும் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.
திடீர் நடவடிக்கை
அவரின் இந்த திடீர் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாகக் கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்கப் பொருட்களுக்கு, தங்கள் சொந்த வரிகளை அறிவித்துள்ளன.

சீனா உடனடியாக பதில் நடவடிக்கைகளை எடுக்காத போதிலும் கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகள், அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தக நாடுகளாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri