ஆசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவு: ட்ரம்ப்பின் எச்சரிக்கையால் முதலீட்டாளர்கள் அச்சம்
ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ( 23) ஆசியப் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தனது ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகத் திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என்றும் விடுத்த இறுதி எச்சரிக்கையே (Ultimatum) இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
ட்ரம்ப்பின் இந்த மிரட்டல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களிடையே உருவாக்கியுள்ளது.
மசகு எண்ணெய் விலை
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தென் கொரியாவின் பிரதான பங்குச்சந்தையான கோஸ்பி (KOSPI) 6.5 சதவீதம் என்ற வரலாறு காணாத சரிவைக் கண்டது.
ஜப்பானின் நிக்கேய் (Nikkei 225) 3.5 சதவீதமும், ஹாங்காங்கின் ஹாங் செங் (Hang Seng) 4 சதவீதத்திற்கு மேலும் சரிந்தன.

அதேநேரம், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent crude) ஒரு பேரல் 113 டொலரைத் தாண்டியுள்ளது. ஒருவேளை ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், எண்ணெய் விலை பேரலுக்கு 150 முதல் 200 டொலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி
இந்தப் போர்ச் சூழலால் ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட எரிசக்தி நிலையங்கள் சேதமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) இது 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை விட மிக மோசமான விளைவுகளை உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

போரை நிறுத்திவிட்டு தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் வேளையில், பங்குச்சந்தைகளின் இந்த வீழ்ச்சி உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam