ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட குழுவினர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் அமைக்கப்பட்ட இரணைமடுக்குளம் மற்றும் இரணைமடு குள ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை பார்வையிட்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது அவற்றின் மூலம் விவசாயிகள் பெறும் பயன்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் பொறியியல் பிரிவு எந்திரி என்.சுதாகரன், வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் கே.கருணாநிதி, கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் கே.பிரகாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர், திருவையாறு ஏற்று நீர்ப்பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












