ஐக்கிய நாடுகளின் ஆசிய - பசிபிக் பிராந்திய பணிப்பாளர் இலங்கை விஜயம்
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில் டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் அரசாங்க, எதிர்க்கட்சி ,குடியியல் சமூகம் ,இராஜதந்திர சமூகம் மற்றும் பிறரை சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அபிவிருத்தி ஒத்துழைப்பு கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்
அத்துடன் அவர் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள அரச மற்றும் குடியியல் சமூக குழுக்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு கட்டமைப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள அதிகாரிகளுடனான அவரது கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் உள்ள அனைத்து ஐக்கிய நாடுகள்
முகவர் நிறுவனங்களின் பணிகள் தொடர்பிலும் அவர் கலந்துரையாடவுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
