ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியடைந்த இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 8வது முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இலங்கை நிர்ணயித்த இலக்கை இந்தியா 6.1 ஓவரில் எட்டி சாதனை படைத்துள்ளது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இலங்கை அணி தலைவர் ஷனாக தாம் வாழ்நாளில் எடுத்த மிக பெரிய தவறாக முடிவாக இது அமைந்துள்ளது.
250 ஓட்டங்களுக்கு மேல் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி தரலாம் என நினைத்த ஷனாகவின் கனவு பகல் கனவாக மாறிவிட்டது முதல் ஓவரிலேயே குசல் பெரேரா பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் 4வது ஓவரில் முகமது சிராஜின் அபார பந்துவீசசால் நிசாங்கா, சமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்செய்ய டிசில்வா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
12 ஓட்டங்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெல்லாலகே 8 ஓட்டங்களும், ஹேமந்தா 13 ஓட்டங்கள் சேர்க்க, ஒரு அளவுக்கு இலங்கை 30 ஓட்டங்களில் சுருண்டுவிடாமல் காப்பாற்றப்பட்டது.
அதிரடியான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்
இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவும் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ஓட்டங்களில் சுருண்டது. சிராஜ் 6 விக்கெட்டும், ஹர்திக் 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து 51 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரராக சுப்மன் கில்லுடன் இணைந்த இஷான் கிஷன் அதிடியாக விளையாடி 6.1 வது ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
100 ஓவர்கள் ஆட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் 21 ஓவரில் எல்லாம் போட்டி முடிந்து ஆசிய கோப்பையை இந்தியா வென்றுள்ளது.
263 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. இத்தனை பந்துகள் மிச்சம் இருந்த நிலையில் வென்றது இதுவே இந்தியாவுக்கு அதிகமாகும்.