சர்ச்சையில் சிக்கிய ஆஷு மாரசிங்க! மீண்டும் பதவி வழங்க ஜனாதிபதி நடவடிக்கை
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க பதவி விலகியிருந்தார்.
நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்தனா நடத்தி குறித்த மிருக துஷ்பிரயோகம் தொடர்பில் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரந்தனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி ஆஷு மாரசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri