நாட்டின் கலாசாரத்தை அழிக்கும் சதி குறித்து பௌத்த உயர் பீடம் எச்சரிக்கை
நாட்டின் பண்பாடு மற்றும் நாகரிகத்தை அழிக்கும் சதி ஒன்று நடைபெற்று வருவதாக அஸ்கிரி பீடாதிபதி மஹா நாயக்கர், வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முத்தியங்கண ராஜமஹா விகாரையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் பௌத்தமதத்திற்கு பல தடைகள் இருப்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை எனவும் இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் மக்களுக்கும், பௌத்த மதத்துக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் அதனை அழிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதுவரை நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்தோம். அது ஒருபோதும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால், அதை சகிக்க முடியாமல், எங்கள் முன்னேற்றத்தை புரிந்து கொள்ள முடியாமல், எங்கள் இனம், எங்கள் மதம், எங்கள் பண்பாடு, எங்கள் நாகரிகத்தை அழிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தமதம், உள்நாட்டவர்களுக்காக அல்லது வெளிநாட்டவர்களுக்காக தலைவலியாக மாறியுள்ளது என்பது புரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர்கள் மேற்கொள்ளும் செயல்களின் மூலம், நாம் நீண்ட காலமாக பாதுகாத்து வந்த பௌத்தமதத்தை அழிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதே தெளிவாக தெரிகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மத ரீதியாக, இந்த நாட்டை பாதுகாப்பதும், பண்பாட்டை காக்கும் பொறுப்பும் பௌத்த பிக்குகளுக்கு மட்டும் ஒப்படைக்க முடியாது என்பதும் வெளிப்படையாக தெரிகிறது என ஞானரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri