ராஜபக்ச காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களுடன் இலங்கை வரப்போகும் அசாத் மௌலானா..!
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது சூடுப்பிடித்துள்ளன.
நேற்றையதினம் (20) மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில், முன்வைத்துள்ள கருத்துக்கள் பெரும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியுள்ளன.
திலீப் பீரிஸ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக் கைதியாக இருந்த பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஜேவிபி, என்பிபி தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறிருக்கையில், விசாரணைகளின் போது வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு தனக்கு சுரேஷ் சாலேவால் ஒரு ஹோட்டலில் விருந்துபசாரம் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், திலீப் பீரிஸ் முன்வைத்த குறித்த தகவல்களை குறுக்கு விசாரணை செய்யாமல் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர் தரப்பினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனவே, தனது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு விசாரணைக்காக இலங்கை வருவதாக அசாத் மௌலானா குறிப்பிட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி...
கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri