ஈரானின் புதிய ஜனாதிபதியாக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன்
ஈரானின் புதிய ஜனாதிபதியாக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வாக்குளைப்பின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.
கடும்போக்கு கொள்கைகளுடைய கன்சர்வேடிவ் போட்டியாளரான சயீத் ஜலிலியை வீழ்த்தி ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் முன்னிலைபெற்றுள்ளார்.
ஈரானில் மக்களால் அளிக்கப்பட்ட 30 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் 53.3% வாக்குகளை பெசெஷ்கியன் பெற்றுள்ளார்.
இப்ராஹிம் ரைசி
ஜூன் 28 ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலின் முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறாததை அடுத்து,இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
ஈரானின் முந்தைய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மே மாதம் உலங்கு வானுர்தி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தேர்தல் நடத்தப்பட்டது.
71 வயதான மசூத் பெசெஸ்கியன் இருதய சத்திரசிகிச்சை நிபுணராவார்.
மேலும், ஈரானிய வாக்காளர்களில் 60 சவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்ததாகவும் தகவல்கள் வௌியாமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
