விமானியாக செயற்பட்ட அருந்திக பெர்னாண்டோ! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் விளக்கம்
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விமான சேவையில் ஒரு விமானியாக தான் கடமையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ சமீபத்தில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.

அதற்கமைய, ALPGSL என்ற ஒரேயொரு விமானிகள் சங்கம் மாத்திரமே இலங்கையில் இருப்பதாகவும், ஆனால் குறித்த சங்கத்தில் அருந்திக்க பெர்ணான்டோ எம்.பி. விமானியாக செயற்பட்டதற்கான எந்தவொரு தரவுகளும் இல்லையெனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறையின் போது வன்முறை குழுவொன்று தனது வீட்டிற்கு தீ வைத்ததன் காரணமாக தனது வீடு, விமானப்படையில் பணி புரிந்த கடிதங்கள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam