தையிட்டி விகாரை காணிகளை மக்களிடம் வழங்குங்கள் : அருள் ஜெயேந்திரன் வலியுறுத்து
தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(20.01.2026) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் கிடையாது
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடயம் குறித்தே மக்கள் போராடுகின்றனர். இதே நேரம் கடந்த அரசுகள் போன்று அநுர அரசும் இனவாதத்தை தொடர்ந்தும் பேசாமல் அதை தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி நடைமுறையாக்க வேண்டும்.

அத்துடன், நாட்டில் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் கிடையாது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றாக இருக்கின்றது.
ஜனாதிபதி அநுர, அரசு ஆட்சிக்கு வரும்போது கூறிய விடயங்களில் சில நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு தருவோம் என்றார்கள். ஆனால் அவை அனைத்தும் தற்போது காணாமல் போய்விட்டது.
இதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணம் வந்து அச்சமின்றி பாதுகாப்பின்றி நடந்து செல்ல ஜனாதிபதியால் முடியுமாக இருந்தால் இன்னும் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் இருகின்றது. எதற்காக அதற்கு மாற்றீடான சட்டம் கொண்டுவர வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 23 மணி நேரம் முன்
நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த நடிகை அசினின் புகைப்படம்... திருமண நாள் கொண்டாட்ட போட்டோ வைரல் Cineulagam