அறுகம் குடா விவகாரம்: மேலும் சில சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்
அறுகம் குடா (Arugam Bay) பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருந்த மேலும் சில சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நேற்றையதினம் (28.10.2024) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
அறுகம் குடா விவகாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்திலேயே மேலும் சில சந்தேகநபர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 3 பேர் சந்தேகத்தின் பேரில் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் மேலும் ஒருவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அறுகம் குடா விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri