கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு என குழப்பத்தை ஏற்படுத்திய நபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல், வாரியபொல பகுதியில் வைத்து 67 வயதான நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
குறித்த நபரால் விமான நிலைய முகாமையாளருக்கும் விமான நிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அழைப்பிற்கு பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் விமானங்கள் தாமதமாகியதாக தெரியவந்துள்ளது.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam