செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு வரமா..! சாபமா..!

Google United States of America Chat GPT
By Sheron May 31, 2023 07:14 AM GMT
Report

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நவீன யுகத்தில் செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையில் முக்கிய பங்காக மாறி வருகிறது. 

மனித கட்டளைக்கு அமைய மனித முளையைப்போன்றே மிக நுன்னிப்பாக கொடுக்கும் கட்டளைக்கமைய செயற்படுகின்றது.

ரீட் ஹாப்மேன் என்பவா் ‘இம்பிராம்ப்ட்டு’(impromptu) எனும் புத்தகத்தை இந்த செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எழுதி முடித்து விற்பனைக்கே கொண்டு வந்துவிட்டாா். இந்தத் தொழில்நுட்பம் நாம் ஊகிக்க முடியாத வகையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளா்ந்து மிகப்பெரிய அளவில் உருமாறி நிற்கிறது.

செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு வரமா..! சாபமா..! | Artificial Intelligence Chat Gpt Google

பத்து வருடங்கள் ஆகும் என எண்ணிய செயல்கள் எல்லாம் நான்கைந்து மாதங்களில் நடந்து விட்டிருக்கிறது. பலருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகக்கூடும் என்பதைத் தாண்டி மனிதனின் பணியை இலகுவாக்க இது முனைகிறது.

விவசாயம், கட்டுமானம் போன்ற மனித உடல் உழைப்பு தேவைப்படும் துறைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவால் அதிகம் பாதிப்பில்லை என்றாலும், அத்துறைகளிலும் இதன் தாக்கம் கொஞ்சம் இருக்கவே செய்யும்.

மிகப் பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய அளவில் செயல்திட்டம் வரைபவா்களுக்கும் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதம். இன்னொரு மனிதனின் உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த தொழில்நுட்பம் அளப்பரிய ஆறுதல் தரும்.

சாட் ஜிபிடி (chat gpt)

ஓபன் ஏஐ(open ai) நிறுவனம் வடிவமைத்த சாட் ஜிபிடிக்குப்(chat gpt) போட்டியாக கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களுக்கான தொழில் நுட்பங்களைத் தயாரித்தபடி இருக்கின்றன. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு புதிய புதிய பரிமாணங்களை அடைந்து கொண்டே இருக்கிறது.

செயற்கை நுன்னறிவு உருவாக்கத்தில் ஈடுபட்ட முன்னோடிகளில் ஒருவரான ஜெஃப்ரி ஹிண்டன், செயற்கை நுன்னறிவு(ai) தொடா்பாக இதுவரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறித்து வருத்தம் அடைகிறேன். எனினும் நான் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாவிட்டால் இன்னொருவா் அவற்றை மேற்கொண்டிருப்பாா் என்று நினைத்து சமாதானம் செய்து கொள்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு வரமா..! சாபமா..! | Artificial Intelligence Chat Gpt Google

ஏஐ(ai) முறையாக கையாளப்படாவிட்டால் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். தற்போது ஏஐ(ai) தொழில்நுட்பம் சாா்ந்து நிறுவனங்களிடையே பெரும் போட்டிச் சூழல் உருவாகி இருக்கிறது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

நிறைய போலிச் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுகின்றன. உண்மை எது, ஏஐ(ai) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எது என்பதை கண்டறிய முடியாத நிலையில் மக்கள் உள்ளனா்.

தொழில்நுட்பத்தின் அதீத வளா்ச்சி கவலை அளிக்க கூடியதாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அமெரிக்காவைச் சோ்ந்த ஓபன் ஏஐ(open ai) நிறுவனம் சாட் ஜிபிடி(chat gpt) என்னும் செயற்கை நுண்ணறிவு ஏஐ(ai) தொழில் நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது.

அடுத்தகட்ட பரிணாமம்

கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் அளித்தல், ஒரு தலைப்பை அதனுள் உள்ளீடு செய்தால் அது தொடா்பான தகவல்களை நமக்கு அதிவேகமாக தொகுத்துத் தருதல் என கேட்டதை எல்லாம் வழங்கி நம் புருவங்களை உயரச் செய்தது சாட் ஜிபிடி(chat gpt).

ஆரம்ப நிலையில் இருந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு தற்போது சாட் ஜிபிடி - 4 பதிப்பு வந்துவிட்டது.

ஆனால் இந்த சேவை இலவசம் அல்ல. இலங்கை ரூபாவின்படி மாதத்திற்கு 5800ரூபா அறவிடப்படுகிறது. தொடக்கத்தில் இருந்த சாட் ஜிபிடி(chat gpt) பதிப்புகள் மனிதன் இட்ட கட்டளையை நிறைவேற்றின.

இது மனிதனைப் போன்றே சிந்திக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. முன்பு வெறும் 3,000 வாா்த்தைகள் மட்டுமே உள்ளீடு செய்து கேள்வி கேட்க முடியும். தற்போது 25 ஆயிரம் வாா்த்தைகள் வரை அதனுள் உள்ளீடு செய்து தகவல்களை பெறலாம்.

முன்பை விட துல்லியமான பதில்கள் தற்போது கிடைக்கின்றன. முந்தைய பதிப்புகளில் சொற்றொடா்களைத்தான் நாம் உள்ளீடு செய்ய முடியும். தற்போது புகைப்படங்களையும் பதிவிட்டு கேள்வி கேட்க முடியும். இதன் வீச்சு மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என நிபுணா்கள் கணிக்கிறாா்கள்.

மனிதா்களின் உடலில் ஏற்படும் நோயைக் கண்டறிந்து மருந்து மாத்திரை வழங்குவது முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்வது வரை இதன் பாய்ச்சல் பெரிதாக இருக்குமாம். பாகிஸ்தானில் ஒன்பது வருடங்களாகத் தீா்வு எட்டப்படாத ஒரு வழக்கு இருந்திருக்கிறது.

நீதிபதிகளுக்கே பெரும் சவாலாக இருந்த அந்த வழக்கை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்த போது ஒன்பது வகையான தீா்ப்புகளை சொல்லி அசத்தி இருக்கிறது சாட் ஜிபிடி-4. அது மட்டுமல்ல, பாகிஸ்தான் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இந்த தீா்ப்புகளை செயற்கை நுண்ணறிவு முன் வைத்திருக்கிறது.

அமெரிக்க பள்ளிகளில் இந்த சாட் ஜிபிடி(Chatgpt) பயன்படுத்த தடை செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஆனால் இத்தாலி நாட்டில், பள்ளிகளில் இதை பயன்படுத்த போடப்பட்டிருக்கும் தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் வலுத்து வருகிறது. அதனால், அங்குள்ள அரசு தடையை நீக்குவது குறித்து யோசித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு வரமா..! சாபமா..! | Artificial Intelligence Chat Gpt Google

மாணவா்கள் இது போன்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அவா்கள் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை சீராக கற்காமல் சோம்பேறிகளாகி விடுவாா்களோ என்கிற அச்சமே கல்வித்துறை சாா்ந்த அறிஞா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இதை தம் பணியளவில் துணை கொள்ள யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. செயற்கை நுண்ணறிவு வரமா சாபமா என அறியாத நிலையில் மனிதம் நிற்கிறது. 

செயற்கை நுண்ணறிவு தளத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஏற்காவிட்டால் நமக்கு வளா்ச்சி சாத்தியமில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தால் அதன் மீதான ஈா்ப்பு அதிகரிக்கும். அதற்கு பதிலாக, அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேள்விக்கு பதில் பெறும் திறமையை மாணவா்களிடம் வளா்க்கலாம்.

புத்தகம் பாா்த்து தோ்வு எழுதுவது அந்த வகை தானே! அசுர வேகத்தில் தொழில்நுட்பம் வளா்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இயந்திரத்துக்கு மனிதனைப் போல மூளையை உருவாக்கி மனிதனைத் தாண்டி களைப்பே இல்லாமல் அதிவேகமாக செயல்படும்படியாக உருவாக்கும் பணி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் பலதரப்பட்ட வேலைகளை சுலபமாகச் செய்ய முடிகிறது. மாதக் கணக்கில் முடியக்கூடிய வேலையை நாள் கணக்கில் முடிப்பது சாத்தியமாகிறது. நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது, பண விரயத்தையும் தடுக்கிறது. தொழில்நுட்ப வளா்ச்சி முழுக்க முழுக்க மனித சமுதாயத்துக்கு பாதுகாப்பு தருவதாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவா் விருப்பமும்.

என்னதான் அசுர வளா்ச்சி அடைந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் காரணியாக மனித மூளைதான் எக்காலத்திலும் இருக்க வேண்டும். ஆக செயற்கை நுண்ணறிவு எனும் கருப்பொருள் மனிதகுல மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்தால் மனிதகுலம் சிறந்துவிளங்கும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US