பாக்கு நீரணையை கபளீகரம் செய்வதற்காக தமிழரை அணைக்க முயலும் சீனா

Sri Lankan Tamils Sri Lanka Government of China China
By T.Thibaharan Oct 28, 2023 10:37 PM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

இலங்கைத் தீவு அதன் கேந்திர அமைவிடம் காரணமாக உலகின் வல்லரசுகளின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. உலகளாவிய அரசியல், பொருளியல், இராணுவ போட்டியின் விளைவுகளை இலங்கைத் தீவு எப்போதும் சந்தித்து வருகிறது.

இன்றைய உலகின் வர்த்தக கடற்பாதையில் இலங்கை தீவு தவிர்க்க முடியாத ஒரு கேந்திர ஸ்தானம். இதனாற்தான் இலங்கை தீவை தொடர்ந்த தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்தற்கு மேற்குலகம் கடந்த 500 ஆண்டுகளாக தொழிற்படுகிறது. அவ்வாறே சீனாவும் இற்றைக்க 600 வருடங்களுக்கு முன்னே முயன்றிருக்கிறது.

பிரித்தானியத்தீவு ஐரோப்பிய கண்டத்திலிருந்து ஆங்கில கால்வாயினால் பிரிக்கப்பட்டிருருப்துவும், அது ஒரு தீவாக இருப்பதுவும், ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமான கடல் பாதையில் அத்திலாந்தி சமுத்திரத்தில் அமைந்திருப்பதுவும் அதனுடைய வளர்ச்சிக்கும் அதனுடைய தனித்தன்மையை பேணுவதற்கும் உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

அவ்வாறுதான் இலங்கை தீவும் இந்து சமுத்திரத்தின் வடபகுதியின் மத்திய பகுதியில் அமைந்திருப்பதுவும், கிழக்கு- மேற்கு இந்து சமுத்திரத்துக்குமான தொடு பாதையில் அமைந்திருப்பதும், இந்திய உபகண்டத்திலிருந்து பாக்கு நீரினையினால் பிரிக்கப்பட்டு தனித்திருப்பதுதான் அதன் கேந்திர முக்கியத்தை அதிகரித்துள்ளது.

பாக்கு நீரணையை கபளீகரம் செய்வதற்காக தமிழரை அணைக்க முயலும் சீனா | Article About Palk Strait

இந்து சமுத்திரத்தின் மேற்கு-கிழக்கு கடற்பாதையில் உள்ள திருகோணமலை துறைமுகத்தை தனது இராணுவ தளமாக பயன்படுத்தி மேற்கில் ஏடன் துறைமுகத்தையும் (வளைகுடா பிராந்தியத்தில்), கிழக்கில் மலாக்கா தொடுகடலில் சிங்கப்பூர் துறைமுகத்தையும் (பசிபிக் சமுத்திரத்துக்குள் இருந்து இந்து சமுத்திரத்துக்குள் நுழைவதற்கான நுழைவாயில்) பக்கபலமாக கொண்டு இந்தியா உபகண்டத்தை ஆங்கிலேயர்கள் நிர்வகிக்க முடிந்தது.

அது மாத்திரமல்ல ஏனைய ஐரோப்பியர்களிடமிருந்து இந்து சமுத்திரத்தை முழுமையாக பாதுகாத்து தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும் முடிந்தது.

கேந்திர அமைவிடம் முக்கியத்துவம் இலங்கை தீவுக்கு என்றும் இருக்கும். இந்தியாவுக்கும் தமிழர் தாயகமும் பாக்கு நீரிணையுடன் இணைந்து இருப்பதனால் பாக்குநீரிணை தமிழகத்தையும் ஈழத்தமிழரையும் இணைக்கும் கடலாக இருப்பதுவும் தமிழர்தாயகம் மேலும் அதிக முக்கியத்துவத்தை என்றும் பெறும்.

உலகின் அதிகாரவலுச் சமநிலையும், வல்லாதிக்க அரசுகளும் மாறலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் தமிழர் தாயகத்தின் கேந்திர அமைவிடம் நிலையானது. அதன் முக்கியத்துவம் என்றும் மாறாது. தமிழர் தாயகத்தின் புவியியல் அமைவிடம்தான் தமிழ் மக்களுக்கான கொடையும் முதுசமுமாகும்.

அதுவே ஈழத்தமிழரின் பலம். அந்தப் பலத்தை அடித்தளமாக கொண்டு தமது விடுதலைக்கான மூலோபாயத்தை வகுத்தால் மடடுமே தமிழ்மக்கள் தமது தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும்.

ஈழத்தமிழருடைய விடுதலைப் போராட்டம்

இலங்கைத்தீவிக்கும் இந்திய உபண்டத்துக்கும் இடையிலான பாக்குநீரிணை ஈழத்தமிழர் தாயக நிலப்பரப்புடன் இருப்பதுவும், இந்து சமுத்திரத்தை பாதுகாப்பதற்கான ராணுவ பரிமானம் மிக்க திருகோணமலை துறைமுகம் தமிழர் தாயகத்தில் இருப்பதுவும்தான் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திலும் அதன் வளர்ச்சியிலும் அதன் வீழ்ச்சியிலும் முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளது. ஈழத்தமிழருடைய விடுதலைப் போராட்டத்திற்கும் அதன் பெருவளர்ச்சிக்கும் பாக்குநீரினை முக்கிய காரணமாக அமைந்தது.

தமிழகத்தை பின்புலமாக, பின்தளமாக கொண்டு இலங்கை தீவுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பிரம்மாண்டமாக வளர்த்துச் செல்வதற்கு பாக்குநீரணையே பாதுகாப்பரனாக இருந்தது. இலங்கைத் தீவுக்குள் நடந்த போராட்டத்திற்கு அனைத்து வழங்கல்களும் பாக்கு நீரணை ஊடாகவே ஈழத்தமிழ் நிலத்துக்கு கிடைத்தது. பாக்கு நீரணையின் போக்குவரத்தும், வழங்கல் நடவடிக்கையும் தடைப்பட்ட போது தமிழீழ விடுதலைப் போராட்டம் பெரும் தோல்விகளையும், பேரிழப்புக்களையும் சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முதலில் கடலிலேதான் தோற்கடிக்கப்பட்டது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகளாவிய ஆதிக்கப்போட்டியில் இந்து சமுத்திரம் என்றும் முக்கிய பாத்திரத்தை வகிக்கும்.

பாக்கு நீரணையை கபளீகரம் செய்வதற்காக தமிழரை அணைக்க முயலும் சீனா | Article About Palk Strait

இந்து சமுத்திரத்தில் ஐரோப்பியர்களால் 1492 ல் தொடக்கப்பட்ட வஸ்கோடகாமாயுகம் இந்த பிராந்தியத்தின் அரசியல் பொருளியல் பண்பாட்டியல் மாற்றங்களை பெருமளவில் ஏற்படுத்தியது. இப்போது இந்து சமுத்திரத்தில் சீன யுகம் ஒன்று ஆரம்பமாவதை அண்மைக்கால இந்து சமுத்திரம் சார் அரசியல் போட்டிகள் வெளிக்காட்டி நிற்கிறது.

இந்து சமுத்திரத்தினுள்ளே சீனாவின் ஊடுருவல் என்பது 2000 ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அது கடந்த ஆண்டு இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 அம்பாந்தோட்டை சீனத் துறைமுகத்தில் 16-08-2022 நங்கூரமிட்டதன் மூலம் இந்து சமுத்திர வருகை சீனா உலகுக்கு அறிவித்துவிட்டது.

இப்போது சீனாவின் ஷி யான்-6 என்ற உளவுக் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி 25 -10-2023 மாலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் விட்டுவிட்டது. இது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது.

இலங்கை நோக்கி சீனாவின் உளவுக் கப்பல்கள் வருகையை தொடர்ந்து சீனாவின் போர்க்கப்பல்களின் வருகையினை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் இலங்கைக்கான சீனாவின் வதிவிடப் பிரதிநிதி அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் எனப்படுவோருக்கு சோறு கொடுத்து சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சோத்துச் சந்திப்பின் நோக்கம் என்ன? இதனால் இப்பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பிரதிபலிப்புகள் என்ன? என்பதனை ஈழத்தமிழ் அரசறிவியல் சமூகம் மிகக் கவனமாக உற்றுநோக்க வேண்டும். சீனா தமிழ் மக்களுடன் நல்லுறவு கொள்ளப் போகிறதாம்! தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி செய்யப்போகிறதாம்!! சீனாவின் தாராள மனதை வெளிக்காட்ட வடக்கின் தமிழ் முக்கியஸ்தர்களுக்கு சோறு கொடுத்து ஆலத்தியெடுக்கப் போகிறதாம்!!!. நல்லது தமிழ் புத்திஜீவிகள் சீனத்தூதுவரை சந்திக்கட்டும்.

ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ""கூடாதார் கூட்டம் கூடாதே!!, கூட்டம் கூடினாலும் கூடங்கள் மாடங்கள் ஏறாதே!!, கூடங்கள் மாடங்கள் ஏறினாலும் நாதங்கள் கீதங்கள் பாடாதே!!!"" என்ற கூற்றை மறந்துவிடலாகாது. தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களையும் சொல்லனாத் துன்பங்களையும் சுமந்தவர்கள்.

இந்துசமுத்திர வகிபாகம்

இறுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத அரசின் சிறைக்குள் மீண்டும் சிக்கி விட்டார்கள். இந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னால் இலங்கை அரசுடன் நின்ற அதிகாரமிக்க சக்தி சீனாவாகும். இதனை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச மற்றும் இலங்கை கொள்கை வேட்பாளரான டயான் ஜெயத்தலக ஆகிய மூவரும் ""இறுதி யுத்தத்தை சீனாவை நம்பி அதன் வீட்டோ அதிகாரத்தை நம்பியே நாம் நடத்தினோம்"" எனக் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தாவின் வெற்றிக்காக சீனா பெருமளவு நிதியை வழங்கியது மாத்திரமல்ல புலனாய்வு தகவல்கள் வழங்கிதோடு, பேரம்பேசல் போன்ற புலனாய்வுப் பணிகள் வாயிலாக இராஜபக்சக்களின் வெற்றிக்காக உழைத்து அவர்களை அதிகாரத்தில் அமர்த்தினார்கள். சீனா இந்து சமுத்திரத்திற்குள் நுழைவதற்கும், இலங்கையில் தமக்கான இடத்தை பெறுவதற்காகவுமே விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான வேலைகளில் இலங்கை அரசுடன் கைகோர்த்து ஒத்துழைத்தார்கள்.

பாக்கு நீரணையை கபளீகரம் செய்வதற்காக தமிழரை அணைக்க முயலும் சீனா | Article About Palk Strait

புலிகளை அழித்ததன் மூலம் இந்து சமுத்திரத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாமலிருந்த புலிகளின் ஆயுதபல ஆளுகையும், புலிகளின் இந்துசமுத்திர வகிபாகமும் அழிக்கப்பட்டது. இதன் பெறுபேறுதான் இலங்கை அரசால் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு கொடுக்கப்பட்டது. எனவே புலிகளின் அழிவின் மூலம் சீனா இலங்கையில் ஒரு துறைமுகத்தை பெற்றுவிட்டது.

அதே நேரத்தில் புலிகளின் அழிவின் மூலம் இந்தியா தனது தென்கோடியில் தனது நிரந்தர எதிரியான சீனாவை உட்கார அனுமதித்துவிட்டது. அதேநேரம் மேற்குலகத்திற்கு போட்டியாக எழுந்து வரும் சீனாவை இலங்கை தீவில் நிலை ஊன்ற விட்டுவைத்ததன் மூலம் வாஸ்கோடகாமா யுகத்திற்கு சீனா சவாலாக எழுந்து வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆனாலும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சியை அடுத்து தமிழருடைய அரசியல் போராட்டம் தொடரும் என்ற நிலையில் இப்போது தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை நசுக்குவதற்கு தமிழ் மக்களின் புத்திஜீவிகளை அரவணைத்து சோறு கொடுத்து விருந்துண்டு ““அணைத்துக்கெடுக்கும்““ தந்திரத்தை சீனர்கள் கையாளத் தொடங்கி விட்டனர்.

தமிழ் மக்களை அணைத்து கெடுப்பதற்கு சீனர்கள் வேட்டியும் சேலையும் கட்டுவார்கள், கம்யூனிச சீனர்கள் திருநீறும் சந்தனமும் பூசி நல்லூர் கந்தன் கோயிலில் மேலங்கியின்றி குப்புற விழுந்து கும்பிடவும் செய்வார்கள். தமிழ் புத்திஜீவிகளின் காலிலும் விழுவார்கள். சோறும் ஆட்டுக்கறியும் ஐஸ்கிரீமும் கொடுப்பார்கள்.

இறுதியில் காலைவாரி விடுவார்கள். இது சீனாவின் அரசியல் பாரம்பரியத்தில் சகஜமானது. அதே நேரத்தில் தமிழ் புத்திஜீவிகள் என்றழைக்கப்படும் ஒரு சாரார் ஏன் சீனாவுடன் உறவு கொள்ளக் கூடாது? சீனாவை தமிழ் மக்கள் பக்கம் சாய்க்க முயற்சிக்கலாமே என்கின்றனர். இவர்களிடம் சில கேள்விகள்.

சீனா தமிழ் மக்கள் பக்கம் வருவதற்கு சிங்கள அரசைவிட ஈழத் தமிழர்களால் எதனை கொடுக்க முடியும்? இலங்கை அரசு ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு துறைமுக நகரத்தையும் கொடுத்துவிட்டது.

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர எதிரி

இலங்கையின் எல்லா பாகங்களிலும் சீனாவின் முதலீட்டுக்கான நிலங்களும் உரிமங்களும் வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அரசற்ற தமிழ் மக்களால் எதனை சீனாவுக்கு கொடுக்க முடியும்? சீனாவுடன் நல்லுறவைப் பேணவும், சீனாவை நண்பனாக்குவதற்குமான அகப்புறச் சூழல் ஈழத் தமிழர்களிடம் உண்டா? ஈழத் தமிழர்களால் சீனாவில் தரித்து நின்று ஈழத் தமிழர்களின் நியாயப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியுமா? அதற்கு சீனாவின் உள்ளகநிலவரம் தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ளதா? ஒருபோதும் இல்லை என்பதே பதிலாகும்.

ஐநாவில் வீட்டோ அதிகாரம் உள்ள சீன அரசு அன்மைய பலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சனைக்கு இருநாட்டு கொள்கையை முன் வைக்கிறது. அதே நேரத்தில் இலங்கையில் ஒன்றை லட்சத்துக்கு மேல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை என்கிறது. தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை ஏற்காத சீன அரசு தமிழ் மக்களுக்கு சார்பாக எதனையும் செய்யும் என்று எதிர்பார்க்க முடியுமா? அதேபோல ஐநா மனித உரிமைச் சபையிலும் இலங்கைக்கு எதிரான எல்லா தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகவே சீனா வாக்களிக்கிறது.

பாக்கு நீரணையை கபளீகரம் செய்வதற்காக தமிழரை அணைக்க முயலும் சீனா | Article About Palk Strait

இனியும் அவ்வாறுதான் செய்யும். எனவே தமிழ் மக்களால் சீனாவிடம் இருந்து எதனை எதிர்பார்க்க முடியும்?. ““உனது அண்டை நாடு இயல்பான எதிரி; அண்டை நாட்டின் அண்டை நாடு இயல்பான நண்பன்““ என்ற சணக்கியனின் கோட்பாட்டிற்கு இணங்க இலங்கை அரசுக்கு இந்திய அரசு இயல்பான எதிரி இந்திய அரசின் அண்டை நாடானை சீனா இலங்கை அரசுக்கு இயல்பான நண்பன். இலங்கை சிங்கள பௌத்த அரசு ஈழத் தமிழர்களின் பொது எதிரி அத்தகைய பொது எதிரியின் நண்பனான சீனாவும் ஈழத் தமிழர்களின் தெளிவான எதிரியே. எந்த வகையிலும் சீனாவை ஈழத் தமிழர்கள் தம்பக்கம் திருப்ப முடியாது.

எனவே இலங்கை அரசும் சீனாவும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர எதிரிகளாவர். ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் பாக்கு நிர்ணையினால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பாக்கு நீரிணை தமிழர்களுக்கே உரித்தானது.

பாக்குநீரிணை தமிழர்களின் கையில் இருக்கும் வரைக்கும்தான் தமிழர்களுக்கு பலம் அத்தகைய தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கு இப்போது சீனா முயல்கிறது. தமிழர்களிடமிருந்து பாக்கநீரிணையை பறிப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் இலங்கை தீவில் அழிக்கப்பட்டு விடுவார்கள். சீனாவின் நீண்டகால பட்டுப்பாதை வியூகத்தின் ஆரம்பம் இந்து சமுத்திரத்தில் புலிகளின் கடலாதிக்கத்தை ஒழிப்பதும் இலங்கை தீவில் தமிழர்களுடைய போராட்டத்தை நசுக்குவதுமாகும். ஈழத்தமிழரை அழிப்பதன் மூலம் இந்தியாவின் இந்துசமுத்திர ஆளுகையை முடக்கிவிடவும் முடியும்.

அதன் மூலம் இந்து சமுத்திரத்தை தனது முழுமையான கடலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான் சீனாவின் இந்து சமுத்திர மூலோபாயமாக உள்ளது. பட்டுப்பாதை வியூகத்தில் இப்போது தென் சீனக் கடலில் ஆரம்பித்து கம்போடியாவில் ரீம் கடற்படைத் தளம், -மியான்மரில் கியாக்ஃபியு துறைமுகம் மற்றும் கோகோ தீவிலிருந்து உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலத்தடி குழாய் மூலம் சீனாவுக்கான எண்ணை வளங்கள்.

இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு கடல்நகரம் -பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம், -ஈரானில் ஜாஸ்க் துறைமுகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கலீஃபா துறைமுகம், செங்கடலில் ஜிபூட்டி சீனக் கடற்படைத்தளம், கெனியாவில் லாமோத்தீவு துறைமுகம் என இந்து சமுத்திரத்தின் கடற்பாதையை முடக்கக்கூடிய எல்லா இடங்களிலும் சீனத் துறைமுகங்கள் உருப்பெற்றுவிட்டன. துறைமுகங்கள் எந்த நேரமும் படைத்தளங்களாக மாறும், மாற்ற முடியும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 அதிகாரப் போட்டி

சீனா முற்றுமுழுதாக பட்டுப்பாதை வியூகத்தை பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது என்பதுதான் உண்மையானது. அந்தப் பூர்த்தி செய்யும் நிலையில் தடையாக இருப்பது மத்தியதரைக்கடலை அண்டியுள்ள இஸ்ரேலின் மத்திய கிழக்கு மீதான மேலாதிக்கம்தான். அந்த மேலாதிக்கத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே இப்போது பாலஸ்தீன்-இஸ்ரேல் யுத்தம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சீனாவின் உலகம் தழுவிய அரசியலில் தமிழ் மக்கள் சிக்கி அமிழ்து போகாமல் தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டும். எனவே இலங்கை அரசும் சீனாவும் தமிழ் மக்களின் தெளிவான நிரந்தர எதிரி இந்த எதிரிகளின் எதிரி தமிழ் மக்களுக்கு நண்பராகவே எதிர் காலத்தில் அமைய முடியும். ஆகவே இத்தகைய எதிரிகளின் எதிரிகளான மேற்குலகமும் இந்தியாவும் தமிழ் மக்களுக்கு இயல்பான நண்பனாகவே இருக்க நேரும். அது மாத்திரமல்ல இந்தியாவை மேற்குலகத்தையும் நண்பனாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்குமான அகப்புறச் சூழலும் சாதகத் தன்மையும் தமிழ் ஈழத் தமிழ் மக்களிடம் உண்டு.

இன்று இந்தியாவும் மேற்குலகமும் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்காமல் இருக்கலாம். ஆனாலும் எதிர்காலத்தில் ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் உண்டு. அதற்கான கேந்திர மையத்திலேயே தமிழர் தாயகம் அமைந்திருக்கிறது.

இந்த கேந்திரத்தானம் என்கின்ற வரம் தமிழ் மக்களை எப்போதும் பாதுகாப்பதற்கான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் தாயக நிலப்பரப்பில் வாழும்வரை இந்தக் கேந்திரத் தானம் மாற்றம் அடையாது. இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு தமிழகத்தின் ஆதரவுடன் இந்தியப் பேரரசில் வாழ்கின்ற 10 கோடி தமிழ் மக்களின் ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு உண்டு. அவர்களுடைய ஆதரவை பற்றி இந்தியாவினை ஈழத்தமிழ் மக்கள் தம்பக்கம் திருப்புவதற்கான வாய்ப்புகளும் சாதகமும் உண்டு.

அவ்வாறே சீனாவின் இந்து சமுத்திர அல்லது இலங்கை தீவுக்கு உள்ளேயான பிரசன்னத்தை தடுப்பதற்கு இலங்கை வடகிழக்கில் வாழ்கின்ற ஈழத் தமிழுடைய ஆதரவு இந்திய அரசுக்கும் தேவையாக உள்ளது. ஈழத் தமிழ் மக்களின் ஆதரவின்றி இலங்கை தீவுக்குள் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாத சூழல் இப்போது தோன்றி விட்டது. இதுவும் ஈழத் தமிழர்களுக்கு சாதகமான விடயமே. எனவே பரஸ்பர நலன்களின் அடிப்படையில் உறவுகள் மலர்வதும் வலுப்படுத்துவதும் அவசியமாகிவிட்டது.

அதே நேரத்தில் மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் 15 லட்சம் தமிழ் மக்களின் பொருளியல், அரசியல் பலம் என்பது மேற்குலகத்தையும் ஈழத் தமிழர் பக்கம் திருப்புவதற்கான சாதகத் தன்மைகளைக் கொண்டு இருக்கிறது.

இந்த அடிப்படையில் இன்று இந்து சமுத்திரத்தில் அதிகாரப் போட்டியில் இந்தியா சார்ந்த மேற்குலகமும் சீனாவும் ஈடுபட்டு இருப்பதனால் இந்த இரு அணிகளில் இந்திய உள்ளிட்ட மேற்குலக அணியில் தமிழ் மக்கள் நிற்பதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்க வல்லது.

இந்த அடிப்படை அறிவியலைப் புரிந்து கொண்டு தாயகத்தில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் சீனர்களின் வலையில் சிக்காது சீனாவின் நயவஞ்சக அரவணைப்புகள் அகப்படாமல் தமிழ் மக்களை அறிவார்ந்து சிந்தித்து செயல்பட்டு பாதுகாப்பது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 28 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US