ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வெற்றியடைந்ததா? தோல்வியடைந்ததா?

Army United States of America Afghanistan Joe Baiden
By Dias Aug 21, 2021 02:48 PM GMT
Report

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வி அடைந்துவிட்டதாக எழுமாற்றாக பலர் சொன்னாலும் உண்மை அதற்குப் புறம்பானதாகவே காட்சியளிப்பதாக கட்டுரையாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும்,

81 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களை இணைத்து பின்லேடன் உருவாக்கிய அல்கைதா எனப்படும் சர்வதேச இஸ்லாமிய இராணுவத்தை அழிப்பது தான் அமெரிக்காவின் இலக்கு.

ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு பின்லேடன் தலைமையிலான இஸ்லாமிய படையை அழிக்கும் இலக்கில் அமெரிக்கா முழுமையாக வெற்றி பெற்றுவிட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

81 நாடுகளில் படை திரட்டி வைத்திருந்த பின்லேடனை ''சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு'' என்ற நிகழ்ச்சி நிரலில் அவர் காட்டிய படைகளையும் இஸ்லாமிய எழுச்சியையும் ஒருங்கு சேர அழித்ததன் மூலம் அமெரிக்காவிலும் அமெரிக்கச் சார்பு நாடுகளிலும் வெடிக்கவிருந்த குண்டுகளை இல்லாமற் செய்திருக்கிறது அமெரிக்கா.

அல்லது நிறுத்தியிருக்கிறது. சர்வதேச இஸ்லாமிய படைகளை தோற்கடிப்பதில் அமெரிக்கா முழுநீள வெற்றியையும், நிரந்தர வெற்றியையும் பெற்று விட்டது என்பதே இங்கு முக்கியமானது.

அமெரிக்காவின் பிரதான இலக்கு எதுவோ அதில் வெற்றி பெற்றுவிட்டது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக தொடர்ச்சியாக மேற்குலகத்திற்கும் இன்றைய இஸ்லாமிய வழித்தோன்றல் களுக்கும் (பாரசீக, அராபியர்) இடையிலான யுத்தம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதனை வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் என வரலாற்று அறிஞர்களும் அரசியல் ஆய்வாளர்களும் எழுதியும் பேசியும் விமர்சித்தும் வருகிறார்கள்.

இன்று இந்த யுத்தம் ஆப்கானிஸ்தானத்தில் நடந்தது என்று எம் கண்முன்னே தெரிந்தாலும் அது சுமாராக 3000 வருடங்களுக்கு முன்பே ரோயன் யுத்தத்துடன் ஆரம்பித்துவிட்டது. பின் பாரசீகத்தில் இருந்து சாக்சிஸ் கி.மு 480ல் கிரேக்கத்தின் மீது படையெடுத்தான்.

அன்றிலிருந்து வெள்ளளைக்கும் - பச்சைக்குமான யுத்தம் தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. அந்த யுத்தம் இந்த நிமிடம் வரை தொடர்ந்து நீண்ட நெடிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரண்டு மதங்கள் தோன்றுவதற்கு முன்பே ஒருபுறம் ஐரோப்பியர்களுக்கும் மறுபுறம் துருக்கிய, பாரசீக, அராபியர்களுக்கும் இடையிலான யுத்தமாகவே இருந்துவந்தது.

கிபி 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர் அண்மைக் கிழக்கு (துருக்கி), மத்திய கிழக்கு வரை மேற்குலகின் யுத்தம் இஸ்லாத்துக்கு எதிரான யுத்தமாகவும், இஸ்லாமியர்களாக மாறியுள்ள வட ஆபிரிக்கர்கள் வரையும் பரந்து விரிவடைந்துள்ளது.

மேற்குலகிற்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டுகால தொடர் யுத்தத்தில் ரோயன் யுத்தத்திலிருந்து இன்றைய ஆப்கானிஸ்தான் யுத்தம் வரையான யுத்தத்தில் இஸ்லாமிய நிலப்பரப்பில் இஸ்லாமியர்கள் இடைக்கிடை வெற்றி பெற்றாலும் தொடர்ச்சியாக நடந்த யுத்தங்களின் ஒட்டுமொத்த தொகுப்பை பார்க்கையில் மேற்குலகமே இறுதியான வெற்றியை பெற்றுக் கொண்டிருப்பதனை காணலாம்.

இப்போது ஆப்கானித்தான் இறுதி புள்ளியாக எம் கண்முன்னே தெரிகிறது. தற்போது ஆப்கானிஸ்தான் பற்றியதான பார்வையை சற்று நுணுக்கமாக அணுக வேண்டியது அவசியமானது. ஆப்கானிஸ்தான் மக்கள் ஒரு தேசிய சமூகமாக கட்டமைக்கப்படாத விருத்தி அடையாத மக்கள் கூட்டம். அவர்கள் யுத்த விரும்பிகளையும், யுத்தப் பிரபுக்களையும் கொண்ட தனித்தனி குழுக்களாக வாழும் மலைவாழ் பழங்குடி சமூகத்தினராவர்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அது முற்றிலும் குறுக்கும் நெடுக்குமான மலைகளைக் கொண்ட புவியியல் பிரதேசம். அந்தப் பிராந்தியத்தில் யாரும் நுழைய முடியும். ஆனால் அங்கே நிலை கொள்வது என்பதுவும் திரும்பி வருதல் என்பதுவும் மிகக் கடினமானது.

அது அந்த நிலப்பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கான புவியியல் பலம். அங்கு அந்த மக்களாற்தான் நிலை கொள்ள முடியுமே தவிர அன்னியர்களினால் நிலை கொள்ள முடியாது. மலைப்பாங்கான புவியியல்தான் ஆப்கானிஸ்தானில் வாழ்கின்ற மூன்று கோடி மக்களை ஒன்றாக திரட்ட முடியாமல் தனித்தனி குழுக்களாக பிரித்து வைத்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அப்கானில் எந்த அந்நியர்கள் நுழைந்தாலும் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் ஒன்றிணைந்து பொது எதிரி மீது மூர்க்கமாக எதிர்த்துப் போராடுவர். அதுவே ரஷ்யா உள் நுழையும் போதும் நிகழ்ந்தது. அவ்வாறே அமெரிக்காவின் நுழைவின் போதும் நிகழ்ந்தது. அன்னியர்களுக்கு எதிராக அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவர்.

ஆனால் அங்கு பொது எதிரி இல்லையேல் இந்த யுத்த பிரபுக்களும் யுத்த விரும்பிகளும் தங்களுக்கிடையே வாளெடுத்து சண்டையிட்டு மடிவர். அன்னிய எதிர்ப்பு என்ற ஒரு பொதுமை உணர்வைத் தவிர மற்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தனித்து அட்டை போல மலை இடுக்கு களுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள்.

அவர்களிடம் அடிப்படை சமூக விருத்திக்கான சிந்தனை முறை வளர்ச்சி அடையவில்லை அல்லது துளிர்விடவில்லை எனலாம். இவர்கள் மத்திய கால சிந்தனைஇகலாச்சாரத்தில் பழங்குடி இனக்குழு முறை வாழ்விலிருந்து விடுபட முடியாதவர்களாக உள்ளனர்.

இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களாக தனித்து பிரிந்து நிற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களுடைய தேவைகளை குறுக்கிக் கொண்டவர்களாகவும்இ புராதன காலத்திற்கே பொருத்தமான சுய தேவைக்கான விவசாய உற்பத்தி மற்றும் கைத்தொழில் உற்பத்தியை மேற்கொள்பவர்களாகவுமே உள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக ஏழ்மையில் வாழும் இவர்கள் இன்றைய பரந்த உலகின் தொடர்பில் இருந்து தம்மைக் குறுக்கிக் கொண்டு வாழ்வதற்கு அந்தப் பிராந்தியத்தின் புவியியல் அமைப்பு முக்கிய காரணியாக இருக்கிறது.

அதுவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசமாகவும் விளங்குகிறது. இவர்களுக்கு இஸ்லாமியமதம் ஒரு பொதுவான குறியீடாக இருந்தாலும் நூற்றுக்கு மேற்பட்ட தனித்தனி குழுக்களாக இவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள்.

இந்தக் குழுக்கள் மதம் என்ற ஒன்றை முன்னிலைப்படுத்தி பொது எதிரிக்கு எதிராக ஒன்றாக நின்றாலும் தமக்கிடையிலான குழுக்களின் தனித்துவத்தையும் பண்பாட்டையும் பேணுவதிலேயே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தங்களுக்கு இடையேயான ஐக்கியத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்களாவர்.

இன்று இவர்களின் கையில் நவீன ஆயுதங்கள் இருந்தாலும் ஏறக்குறைய மத்திய கால சிந்தனை முறைக்கும்இ பழக்க வழக்கங்களுக்கும் உட்பட்டவர்கள் ஆகவே இருக்கிறார்கள்.

மத்திய காலத்தில் இவர்களின் கையில் இருந்த கல்லுக்கும் வாளுக்கும் பதிலாக இன்று துப்பாக்கியும்இ பீரங்கியும் இருப்பது ஒன்று தான் இவர்களில் ஏற்பட்டிருக்கின்ற முக்கிய மாற்றமே தவிர இவர்களது அறிவியலிலும் சிந்தனையிலும் பண்பாட்டியலிலும் அவர்கள் உலகின் நாகரீகத்தின் கடைக்கோடியில் நிற்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இவர்கள் சமூக கலாச்சார தடைகளை கடந்து நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் சிந்திக்கக்கூடிய சிந்தனை முறையையோஇ கல்வி முறையோ மனமாற்றத்தையோ விருப்பத்தையோ கொண்டவர்களாக காணப்படவில்லை.

எனவே மத்தியகால பண்பாட்டுச் சிந்தனை முறையில் இருந்தும்இ இனக்குழுவாத இயல்பில் இருந்தும் விடுபட முடியாத இவர்களுக்கு கல்லும் வாளுமே முதன்மை ஆசானாக தோன்றும். அந்தக் கல்லும் வாளும் இன்று துப்பாக்கி பீரங்கியாக அவர்களிடத்தில் வீற்றிருக்கிறன.

அதுவே அவர்களின் முதன்மையான தெரிவாகவும் உள்ளது. கம்யூனிஸ விஸ்தரிப்புக்காக ரஷ்யாவும்இ கம்யூனிச எதிர்ப்புக்காக அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானுள் உள்நுழைந்தன.

மத்திய கால பழமை சமூகமாக வாழ்ந்த அவர்களிடம் இன்று நவீன ஆயுதங்களை அவர்களின் கையில் திணித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த நவீன மாற்றமானது அறிவியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

மாறாக அவர்கள் கற்காலத்தை நோக்கி பின்சென்று கொண்டிருக்கிறனர் . இவர்களிடம் காணப்படும் பெண் அடிமைமுறை கோட்பாடு இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். கூடவே இவர்கள் ஜனநாயக மறுப்பு கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.

குறிப்பாகச் சொன்னால் நவீன ஆயுததாரிகளாக மாற்றியதே தவிர நவீன சிந்தனையாளர்களாக மாற்றவில்லை. நம்மை அவர்கள் மாற்ற முயற்சிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இத்தகைய சிந்தனை முறையில் உள்ள ஆப்கானிஸ்தானத்தில் பின்லேடனின் வருகை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது. ஏனெனில் பின்லேடன் மேற்குலக சிந்தனைக்கும் மேற்குலக அறிவியல் தொழில்நுட்ப அறிவையும் கொண்டவர் என்பதாகும். அமெரிக்காவினால் ரஷ்யாவுக்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட பின்லேடன் பிந்நாளில் ரஷ்யாவின் பின்வாங்கலை அடுத்து அவர் அமெரிக்காவுக்கு எதிராக வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததான நிலை ஏற்பட்டது.

பின்லேடன் ஆப்கானிஸ்தானத்தில் இருந்துகொண்டு 81 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களை இணைத்து மேற்குலகிற்கு எதிரான அல்கைதா எனப்படும் ஒரு சர்வதேச இஸ்லாமிய படையை கட்டும் ஆற்றல் உள்ளவராக மாறினார்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் என்பது பின்லேடன் ரஷ்யாவைத் தாக்கியதைவிடவும் அமெரிக்காவை தாக்கிய இடம் மிக பாரதூரமானது. அந்த தாக்குதலோடு மேற்குலகம் ஒரு முழு அளவிலான முடிவுக்கு வந்தது.

அதுதான் இஸ்லாமிய உலகின் முதுகெலும்பை முறித்து அதனை படுக்கையில் போடுவது என்பதாகும். அதன் முதற்கட்டமாக 26 செப்டம்பர் 2001 அன்று ஐநா பாதுகாப்புச் சபையில் ''சர்வதேச பயங்கரவாத தடுப்புச் சட்டம் '' என்ற ஒரு சட்டத்தை அமெரிக்கா ஒருமனதாக உருவாக்கியது.

அதுவே உலகளாவிய சட்டங்களின் தாய் சட்டமாக நிலைநிறுத்தப்பட்டது.. இந்தத் தாய் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுதான் 2001ல் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ''பின்லேடனை வேட்டையாட புறப்பட்டு விட்டோம்'' என்ற கோசத்துடன் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை மேற்கொண்டார்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவெனில் பல இஸ்லாமிய நாடுகளும் இந்தக் கூட்டுப்படை நடவடிக்கைக்கு அனுசரணை வழங்கி பின்புலத்தில் நின்று பங்களித்தன. ஆப்கானித்தான் படையெடுப்புக்குப் பின்னர் பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த போது ஒபாமா நிர்வாகத்தினால் பின்லேடன் கொல்லப்பட்டார்.

அவரை தொடர்ந்து அல்கைதாவின் முக்கிய உறுப்பினர்களும் படையினரும் அழிக்கப்பட்டனர். அமெரிக்கா கருத்தில் எடுத்த இஸ்லாமிய சர்வதேசபயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ஏறக்குறைய பின்லேடனுடன் முடிவடைந்துவிட்டது.

ஆனாலும் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து அல்கைதாவினதும்இ தலிபான்களின் முனைப்பான முக்கிய தலைவர்கள் யாவரையும் வேட்டையாடி அழித்துவிட்டது. அத்தோடு மத்தியகிழக்கில் எதிர்காலத்தில் தனக்கு தலைவலி தரக்கூடிய லிபியா சிரியா ஈராக் போன்ற நாடுகளை தலையெடுக்கா வண்ணம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை உருவாக்கி அந்நாடுகளை சின்னாபின்னப் படுத்திவிட்டது.

அவ்வாறே வட ஆபிரிக்காவில் எகிப்து இ துனிசியா லிபியா என தன் எதிரிகள் அனைவரையும் அனேகமாக ஒழித்துக் கட்டிவிட்டது. ஒபாமாவின் காலத்திலேயே ஆப்கானிஸ்தானத்தில் இருந்த படைகள் விளக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.

அந்த முடிவுக்குப் பின்னும் தனது முழுமையான வெற்றியும் எதிர்கால நலனும் உறுதிப்படுத்தப்பட்ட பின்புதான் தலிபான்களின் எஞ்சியிருந்த கீழ்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆரம்பித்தது.

அந்த பேச்சுவார்த்தைகளின் பின்புதான் படை விலக்கல் என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. ரம்மைத் தொடர்ந்து இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் படை விலகலை துரிதப்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளார் அவ்வளவுதான்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளும் தொடர்ச்சியாகப் படை விலகலுக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில்தான் செயல்ப்பட்டள்ளனர் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்தோடு ஆட்சிக்கு வருகின்ற அனைத்து ஜனாதிபதிகளும் ஒரே குறிக்கோள்ளுடனேயே செய்யப்பட்டுள்ளார்கள் என்பதனையும் கவனிக்க வேண்டும். எனவே அமெரிக்கா தன்னுடைய நடவடிக்கையில் நீண்டகால நலன்களின் அடிப்படையிலேயே தொழிற்பட்டிருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.

எப்போது அமெரிக்கா வெளியேறுகிறதோ அப்போது ஆப்கானிஸ்தானின் நூற்றுக்கணக்கான இனக் குழுக்களுக்கு இடையே மோதல் நிலை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கிவிட்டுத்தான் செல்கின்றார்கள்.

ஆப்கானிஸ்தானுக்குள்ளிருந்து ஒரு இராட்சதன் வெளியேறுகின்ற போது ரஷ்யாஇ சீனாஇ பாகிஸ்தான் என்ற மூன்று இராட்சதர்கள் உள்ளே நுழைகின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தின் யுத்தப் பிரபுக்களை அவரவர் பக்கங்களுக்கு வளைப்பர்.

தங்களுக்குத் தேவையான கனிம வளங்களை சூறையாடுவர். இவர்களுக்கிடையிலான தேனிலவு சிறிது காலம்தான். அதன்பின் ஆப்கானிஸ்தானத்தில் யுத்தப்பிரியர்கள் மீண்டும் மேற்படி மூன்று அந்நியர்களுடனும் தமக்கு இடையேயும் மோதுவார்கள் என்பது திண்ணம்.

ஆகவே அல்கைதா எனப்படும் சர்வதேச இஸ்லாமிய இராணுவ படையை அழிப்பதுதான் அமெரிக்காவின் இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கு ஆப்கானிஸ்தானை தளமாக அது பயன்படுத்தியது.

அந்த விதத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது. அந்த யுத்தத்தின் போது அது ஆப்கானிஸ்தானில் இருந்து பெறக்கூடிய கனிய வளங்கள் தொடர்பான இலாபக் கணக்கில் அமெரிக்காவுக்கு இலாபம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதனுடைய முதல் இலக்கை அது பூர்த்தி செய்திருக்கிறது.

அதே நேரத்தில் அண்டை நாடுகளான மத்திய ஆசிய நாடுகளில் தன்னுடைய வர்த்தக நலன்களை விஸ்தரித்து வலுப்படுத்தி காலூன்றி உள்ளது. இத்தோடு அதனுடைய பணி முடிவடைந்து வெளியேறுகிறார்கள். வெளியேறுகின்ற போதும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கும் அனைத்து வகையான தற்காப்பு நடவடிக்கைகளை செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

எதிர்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டியதில்லை. மாறாக இஸ்லாமியர்களையும் இஸ்லாமியர்களையும் மோத விடுகின்ற அனைத்து சூழ்நிலைகளையும் உருவாக்கி அவர்களை மோதவிட்டு விட்டு செல்கிறார்கள்.

அதாவது அரசியல் அறிஞர்களின் கருத்துப்படி சொன்னால் வெள்ளைக்கும் பச்சைக்குமான யுத்தமானது இப்போது பச்சைக்கும் பச்சைக்குமான யுத்தமாய் பரிணாமம் பெற்றுவிட்டது என்று சொல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US