வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா
வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா இன்று(29.05.2025) பாடாசாலை அதிபர் சு.முகுநதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அத்துடன், தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களான கிறீஸ் மரம் ஏறுதல், தலையணை சண்டை உட்பட பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்ததுடன், மாணவர்களுக்கான கைவிசேடங்களும் வழங்கப்பட்டதுடன் உற்பத்தி பொருட் சந்தையும் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாமன், வவுனியா வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி சசிகுமார் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
