மக்கள் ஆதரவுடன் மிருசுவில் பகுதியை வந்தடைந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணி மிருசுவில் பகுதியை வந்தடைந்தது. தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தாயகத்தில் பேரெழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை அடைந்து பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வரவுள்ளது.
இந்த நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஐந்தாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியானது வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் கிளிநொச்சி பகுதியில் பேரணியில் இணைந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
