சில நாட்களுக்குள் இடம்பெறவுள்ள அதிரடி கைது
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான சண்டையின் விளைவாகும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் லசந்த விக்ரமசேகர மீது 6 வழக்குகள் உள்ளன. அவர் பாதாள உலக குழுவினருடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதேவேளை லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எதிர்வரும் 2-3 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள், தங்களுக்கு சார்பான ஆட்சி அதிகாரத்தை அமைப்பதற்காக திட்டமிட்டமை அவர்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளது. அந்த கும்பல்களிடம் விசாரணைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
எதிர்காலத்தில் அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் விபரங்களை நான் நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்தித்தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



