யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள்
யாழ்ப்பாணம்
யாழில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்ற ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்பொழுது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது 300லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
