போதைப்பொருட்களுடன் சுற்றுலா சென்ற 21 பேர் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது
போதை பொருட்களுடன் ஹட்டன் வீதியூடாக சுற்றுலா வந்த 21 பேர் ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (11.02.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் சிவனொளிபாதமலை, நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு அதிகமான சுற்றுலா பிரயாணிகள் வருகை தந்துள்ளனர்.
போதைப்பொருட்கள் மீட்பு

இவ்வாறு வருகை தந்த சுற்றுலா பிரயாணிகளை ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் வாகனங்களை பொல்பிட்டிய மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் சோதனை செய்த போது இவர்களிடமிருந்து சட்டவிரோத சிகரட்டுக்கள், கேரளா கஞ்சா, ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இந்த போதை பொருட்கள் வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவ கொழும்பு சிலாபம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களை ஹட்டன் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை

குறித்த சோதனை நடவடிக்கை ஹட்டன் பொலிஸ் கோட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் விச போதைப்பொருட்கள் வைத்துக்கொண்டு சுற்றுலா சென்ற சுமார் 39 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam