கொழும்பில் பணத்திற்காக பிள்ளையை கடத்திய பெண் திடீரென உயிரிழப்பு
நீர்கொழும்பில் போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச்சென்ற பெண் திடீரென சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன் கெகுனாவல தெரிவித்துள்ளார்.
சேதுவத்தை - வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 47 வயதுடைய சமிலா உதயங்கனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து ஹெரோயினை பெற்றுக்கொண்ட நபர் அதற்கான பணத்தை முழுமையாக செலுத்தாமையால், அவரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று,கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியிலுள்ள வீடமைப்பு தொகுதியில் தடுத்து வைத்திருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கொழும்பு சிறைச்சாலை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனமடைந்த சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் பணத்திற்காக பிள்ளையை கடத்திய பெண்ணால் பரபரப்பு |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
