திருடப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது: பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்
நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்த கண்ணீர் புகை குண்டுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எத்துல் கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொது அமைதி முகாமைத்துவ எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டியில் பொலிஸ் குழுவொன்று கண்ணீர் புகை குண்டுகளை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் அறிக்கை
இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் திருடியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில், மேல் மாகாண (தெற்கு) குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஐந்து கண்ணீர்ப்புகை குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபரை ஏத்துல் கோட்டே அழகேஸ்வர வீதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இனறு ஹல்ட்ஸ்டோர்ஃப் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம் |