ஆறுமுகத்தான்குளம் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாகத் தயாரித்த இடியன் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபரிடமிருந்து இடியன் துப்பாக்கியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டில் ஒருவர் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த துப்பாக்கியையும், துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு பொலிஸார் குறித்த நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam