யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் செய்த காரியம்
யாழ். மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (02.02.2023) மேற்கொள்ளப்பட்டதாக யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகநபருக்கு விளக்கமறியல்
இவரிடமிருந்து சுமார் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை நேற்றையதின மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
