நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனைகளை கட்டுப்படுத்த போதிய ஆளனி வளங்களின்மையே காரணம் என மதுவரித் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து காணப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி
விற்பனைகளால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் கூடுதலான குடும்பங்கள்
பாதிக்கப்பட்டு;ள்ளன.
யாழ்ப்பாணம்
ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ். கோப்பாய்
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் சட்டவிரோதமாக 5 லீட்டர் கசிப்பினை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (06.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை
மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




