யாழ். தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பொலிஸ் நிலையம் அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த ஹயஸ் வாகனமும் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில், கடந்த திங்கட்கிழமை (04) மாலை 5.30 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தி இருந்தது.
தீவிர விசாரணை
இதனையடுத்து வன்முறை கும்பல் ஹயஸ் வானில் மருதனார்மடம் நோக்கி தப்பிச் செல்லும் போது துரத்தி சென்ற பொலிஸார் மல்லாகம் பகுதியில் வாகனத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.

அத்துடன், மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் பொலிஸாரால் அடையாளம் மீட்கப்பட்டிருந்தன.
மேலும், வாள்வெட்டில் காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தப்பியோடிய வன்முறை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய யாழ்ப்பாண பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினர், காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினர், தெல்லிப்பளை பொலிஸார் ஆகியோர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்: தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam