யாழில் சட்டவிரோத கடலாமைகளை கொண்டு சென்ற இருவர் கைது (Video)
சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளைப் பட்டாரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவரை, மானிப்பாயில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (31.07.2023) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மானிப்பாய் பொலிஸார் நிலைய பதில் பொறுப்பதிகாரி மில்றோய் உட்பட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸார் பட்டாரக வாகனமொன்றை வழிமறித்துள்ளனர்.
வழக்கு தாக்கல்
இந்நிலையில், வாகனத்தின் பின்புறத்தில் சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகள் காணப்பட்டன.
அதனைச் சோதனையிட்டபோது 4 கடலாமைகளை உயிருடன் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் கடலாமைகளை விற்பனைக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
