கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டுள்ளார்.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வர 8 கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர்.
விளக்கமறியலில் வைக்க
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதவான் முன் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri