புதையல் தோண்டிய ஒருவர் கைது : 06 சந்தேக நபர்கள் தப்பியோட்டம் (PHOTOS)
அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் அடம்பன் பொலிஸார் இணைந்து குருவில் வான் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி பொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
தப்பியோடிய சந்தேக நபர்கள் 6 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam