கொழும்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு (Colombo) ராகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது ராகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய 'பாஸ் ரொஷான்' என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வைத்திருந்த ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
