கிளிநொச்சியில் இருவேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது
கிளிநொச்சி மாவட்டத்தில் இருவேறு குற்றச் செயல்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (29.07.2023) முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்றுப் பகுதியில் இருந்து அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிப் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சுண்டி குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 11 முதிரை மரக் குட்டிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணை பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 03.08.2023 அன்று தடைய பொருட்களுடன், கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
