தமிழர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் அடித்துக்கொலை! சந்தேகநபர் கைது
கிளிநொச்சியில் அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (17.11.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் முன்னால் வைத்து அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த (10.10.2022) அன்று உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் கைது
இந்த நிலையில் கிளிநொச்சி இரணைமடுவில்
அமைந்துள்ள மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட புலன்
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை நேற்று கொழும்பில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam