ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Kalutara Galagoda Aththe Gnanasara Thero High Court of Sri Lanka
By Dhayani Oct 04, 2026 07:59 AM GMT
Report

புதிய இணைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாளை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேரரை நாளை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

களுத்துறை, தினியாவல பகுதியில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) அதிகாரிகள் குழுவினரால் ஞானசார தேரர் நேற்று (03) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.

நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.

மேலும், தேரர் வெளிநாடு செல்வதை தடுக்கும் பயணத்தடையையும் நீதிமன்றம் பிறப்பித்தது.

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் நேற்று (03) களுத்துறை, தீனியாவள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Arrested Gnanasara Thero To Appear In Court Today

இதனையடுத்து ஞானசார தேரர் நேற்று இரவு கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்,  இன்று  நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை அண்மையில் உயர்நீதிமன்றம் இரத்துச்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளுடன் நாடு திரும்பிய இலங்கையர் அதிரடியாக கைது

வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளுடன் நாடு திரும்பிய இலங்கையர் அதிரடியாக கைது

இலங்கை கடற்பரப்பில் குவிந்துள்ள ஈரானிய கப்பல்கள்! இலங்கைக்கு மறைமுகமாக காத்திருக்கும் பாரிய சிக்கல்

இலங்கை கடற்பரப்பில் குவிந்துள்ள ஈரானிய கப்பல்கள்! இலங்கைக்கு மறைமுகமாக காத்திருக்கும் பாரிய சிக்கல்

YOU MAY LIKE THIS VIDEO




மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US