நான்கு மாணவர்களை தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய இளைஞர் கைது
புத்தளம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் நான்கு மாணவர்களை தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில், தரம் 4இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவனிடம் கையடக்க தொலைபேசியில் பாலியல் சார்ந்த தவறான காட்சிகளை காண்பித்து தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய செயற்பாட்டுக்காக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் நேற்று (05.12.2023) இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் புத்தளம் – லுணுவில பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் மாணவர்களிடம் தவறான காட்சிகளை காண்பிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan