வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
கட்டார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிப் பண மோசடி செய்த இடைத்தரகரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் எப்பாவல-எலதிவுலவ்வெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்குக் கிடைக்கப் பெற்ற 6 முறைப்பாடுகளுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண மோசடி
மேலும், சந்தேக நபர் சுமார் 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓய்வுபெற்ற இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடமும் இவ்வாறு மோசடியாகப் பணம் பெற்றுகொண்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
