சம்பூர் கைது விவகாரம்: பிணை அனுமதி கிடைத்தும் திங்கள் வரை விளக்கமறியலில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பூரைச் சேர்ந்த நால்வரையும் பிணையில் விடுவிக்க மூதூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், அவர்கள் எதிரவரும், திங்கட்கிழமைதான் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நால்வரையும் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கான அனுமதியை மூதூர் நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ள போதிலும், அதற்குப் பின்னர் அது தொடர்பான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து, அவர்களைப் பிணையில் வெளியே கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிணை சட்ட ஒழுங்கு
நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் பள்ளிவாசல் தொழுகைக்காக இடை விடுமுறையில் சென்றதன் காரணமாக அவர்களின் பிணை சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமையும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், அவர்களை பிணையில் திங்கட்கிழமையன்று விடுவிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்: தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |