வீட்டை உடைத்து மடிகணிணி திருடிய சிறுவர்கள் கைது
காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 3 இலச்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிகணிணி ஒன்றை தீருடி சென்ற 15 மற்றும் 16 வயதான இரண்டு சிறுவர்களை இன்று (30.09.2022) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடிகணிணி திருட்டு
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று (29.09.2022) பகல் குறித்த வீட்டை பூட்டிவிட்டு சென்ற சந்தர்பத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த அப்பிள் ரக மடிகணிணி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மடிகணிணியை திருடி சென்ற குறித்த இரு சிறுவர்களை பொலிஸார் கைது செய்ததுடன் மடிகணிணியை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
இதேவேளை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டினை சேதப்படுத்தியதோடு வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளை எரியூட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் குறித்த
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு
சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
