புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (19.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எட்டு பேர் கைது
இதன்போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, சிலாபம், யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5