கிளிநொச்சி நீதிமன்றத்தில் 140 கிலோ கஞ்சாவை திருடிய நீதிமன்ற பணியாளர் உட்பட நால்வர் கைது(Photos)
கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்று(03.11.2023) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது.
இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இரகசிய தேடுதல்
இந்நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மீளவும் பொலிஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதில் ஒருவர் நீதி மன்ற பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.