கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகள் கைது (Video)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் இன்று காலை புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
புத்தளம், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புத்தளம் - குருநாகல் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரமடையும் விசாரணைகள்

மோட்டார் சைக்கிள் ஒன்றில் எடுத்துச்செல்லப்பட்ட சிறிய பை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 650 கிராம் கஞ்சா அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கஞ்சாவை விநியோகித்தவர்கள் மற்றும் யாரிடம் அதனைக் கையளிக்க எடுத்துப் போனார்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri