வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர் கைது
போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (30) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபர் வெளிநாட்டிலிருந்து நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
இதன்போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து ஒரு கிராம் 485 மில்லி கிராம் குஷ், 05 கிராம் 44 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 190 மில்லிகிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
