ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிரான பிடியாணை இரத்து
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவலை நகராதிபதி ரஞ்சன் ஜயலால் ஆகியோருக்கு எதிரான பிடியாணை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தேசிய தொழிலாளர் சங்கத்துக்கு உரித்தான தெகிவளையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றை முறைகேடான வழியில் குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் கடுவலை நகராதிபதி ரஞ்சன் ஜயலால் ஆகியோருக்கு எதிராக கல்கிசை நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வு பொலிஸார், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியிருந்தனர்.
வழக்கு விசாரணை
அதனையடுத்து, மேற்குறித்த மூவருக்கும் எதிரான பிடியாணையை இரத்துச் செய்யுமாறும், அவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், நேற்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கல்கிசை மஜிஸ்திரேட் நீதவான் பசன் அமரசிங்க, முன்னைய நீதவான் மூலம் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை இரத்துச் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, இது தொடர்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



