இஸ்ரேலிய பிரதமருக்கு பிடியாணை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு (Benjamin Nethanyahu) பிடியாணை பிறப்பித்துள்ளது.
போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டி இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸின் இராணுவத் தளபதி முகமது டெய்ஃப் ஆகியோரை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்காக, குறைந்தபட்சம் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் குறைந்தபட்சம் 2024ஆம் ஆண்டு மே 20ஆம் திகதி வரை, வழக்குத் தொடரின் பிடியாணைகளுக்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்த நாள் வரை, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் யோவ் கேலண்ட் ஆகிய இரு நபர்களுக்கு பிடியாணைகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, இந்த பிடியாணைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 124 உறுப்பு நாடுகள் - இஸ்ரேல் அல்லது அதன் நட்பு நாடான அமெரிக்காவின் மீத தாக்கத்தை ஏற்படுத்தாது என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.