அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி! அதிகரிக்கும் சம்பளம்
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிவரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வலுவான அரச சேவை
வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
மேலும், நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். தற்போதைய அரசாங்கமே அதிகபடியான அரச சேவையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும்.
அந்தவகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
