வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, கல்லோய சிறிதம்ம தேரர், ரத்னகராவே ஜனரதன தேரர் ஆகியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிடியாணையை இன்று (31.08.2023 )கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினால் இவர்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள தனியார் கட்டடமொன்றுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |