ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கில் ஒருவருக்கு பிடியாணை உத்தரவு..!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சாட்சியாளராக இருக்கும் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கின் 12 ஆவது சாட்சி இன்று(0505.2026) சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிடியாணை உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்று(05) இடம்பெற்ற நிலையில், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri