தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்
இலங்கையில் கைதான கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகளை விடுவிக்கவும், அவர்களை மீட்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 35 கடற்றொழிலாளர்கள் 4 நாட்டுப் படகுகளுடன் வியாழக்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் ஜெய்சங்கரிடம் இருந்து இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள்
இதற்குள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த 35 பேரும், ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு வாரியபொல சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜெய்சங்கருக்கு நேற்று ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் இரண்டு தமிழக கடற்றொழிலாளர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்
எனினும் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கப்படாமை வருத்தமளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்கு மத்தியில் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதற்கும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கு வலுவான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |